Monday, April 9, 2018

யோகம்




யோகம் எதிரெதிர் நிற்கும் இருமுனையிலும் ஒன்றே நிலைகொள்வது.- இது இமைக்கணத்தின் வரி. யோகம் என்றால் என்ன என்னும் விளக்கம் பலவாறாக பலராலும் வழங்கப்பட்டுள்ளது. அது சூழல் சார்ந்தது. கொள்கைகள் சார்ந்தது. கீதையைப்புரிந்துகொள்ள இந்த வரியையே சரியான வழிகாட்டியாகக் கொள்ளலாம். கீதையின் ஒவ்வொரு பகுதியும் ஏன் யோகம் என இருக்கிறது என்பதற்கான பதில் இது. அதை பல வரிகள் விளக்கின்றன. பெர்சனல் யூனிவர்சல் இரண்டும் ஒன்றாக இருப்பது. சாமானியம் விசேஷம் இரண்டும் ஒன்றையே அறுதியாகச் சொல்வது. எதிரெதிர் வாதிடுபவர்கள் இறுதியாகச் சென்றுசேர்வது. அதாவது இணைந்த ஞானம். இண்டக்ரேட்டட் ட்ரூத் என்று இதைச்சொல்கிறார் பிரபுபாதர்

கிருஷ்ணசாமி