ஜெ
வியாசர் நான்கு ஞானநிலைகளைச்
சொல்கிறார். இங்குள்ள கர்மச்சுழற்சியைச் சொல்லும் நான்கு விளக்கங்கள் அவை. அதில் முதலாவது
உள்ளதுதான் எங்கும் சொல்லப்படும் இந்து நம்பிக்கை. கிறிஸ்தவ இஸ்லாமிய நம்பிக்கைகளும்
இதெல்லாம்தான். மற்ற மூன்றும் லௌகீகர்கள் அல்லாமல் ஞானம் தேடுபவர்களுக்கு உரியவை.
அவற்றை வியாசர் உலகியலானுக்கு முதல் விடை. தேடுபவனுக்கு இரண்டாவது விடை. அறிஞனுக்கு மூன்றாவது விடை. மெய்யுசாவிக்கு நான்காம் விடை. என்கிறார்
ஆனால் அவை விடைகள் அல்ல கேள்விகளே
என்கிறார் கிருஷ்னன். நன்மை நாடுவோர் முதல் விடையை அடைகிறார்கள். ஒழுங்கை நாடுவோர் இரண்டாம் விடையை அடைகிறார்கள். உண்மை நாடுவோர் மூன்றாம் விடையை கொள்கிறார்கள். குறைவின்மை நாடுவோர் நாலாவது விடையை சென்றடைகிறார்கள். என்று சொல்கிறார்
கேள்விகளே விடைகளாகி வருகின்றன.
கேள்வியில்லா வெறுமையில் நின்று பார்ப்பவனுக்கு விடையே அல்லாத பிரம்மாண்டம் காணக்கிடைக்கிரது
மாதவன்