தந்தை சொன்ன எட்டுநெறிகளை கடைப்பிடித்து தியானம் செய்வதாக வியாசர் சொல்கிறார்.
1 சொல்லில் உளம்நிறுத்தி, பிறவற்றை தொகுத்துக்கொள்ளுதல். இது மந்திர தாரணை என்று சொல்லப்படுகிறது
2 அதேசமயம் அந்தச்சொல்லில் மூர்க்கமாக பிடித்திராமல் அது நிகழவிடவேண்டும்
3 அந்தச்சொல் எண்ணங்களாகப் பெருகாமல் போகப்போக எண்ணமில்லாமல் குறையவேண்டும்
4 பின்னர் மந்திரச் சொல் அர்த்தமிழந்து வெறும் ஒலி மட்டுமே ஆகவேண்டும்.
5 ஒலி இல்லாமலாகி மௌனம்
6.வெறுமை,
7 தனிமை
8 தன்னிலையை கடந்து இல்லாமலாதல்.
இந்த எட்டு வகை எல்லா மரபிலும் சொல்லிக்கொடுக்கப்படும். அஷ்டாங்கமார்க்கம் ஒவ்வொரு யோகமுறையிலும் ஒவ்வொரு வகை. யோகாசனமுறையில் வேறு அஷ்டாங்கயோகநிலைகள் உள்ளன. வியாசர் மூன்றாம் நிலையிலேயே தவறிவிடுகிறார்
சாரங்கன்