Wednesday, April 11, 2018

இமைக்கணம்



நைமிசாரண்ய வனம் என்ற கருதுகோளுடன், மகாபாரத நாயகர்களை மறுபரிசீலனைக்கு உள்ளாக்கும் நூதன வடிவில், கண்ணிமை மூடித் திறப்பதற்குள் ஒரு ஜென்மம் வாழ்ந்த நிறைவை யமன் வாயிலாக உணர்த்தும் திறனும், அதற்கு கிருஷ்ணரின் பயன்பாடும் வியக்க வைக்கின்றன. அவருடன் சிறிதேனும் தொடர்பு உள்ளவன் என்பதில் மிகவும் பெருமிதம் கொள்ளும் தருணம் இது.
இமைக்கணம்- அற்புதமான படைப்பு; வெண்முரசு வரிசையில் தனித்து நிற்கும் புதினமாக மிளிரப் போகும் இலக்கியம். கண்ணிமைக்கும் நேரமே நமது வாழ்க்கை. அதற்குள் இந்த அரிய படைப்பை படிப்பதும், ரசிப்பதும், அனுபவித்து மகிழ்வதும் அவசியம். 

!https://writervamumurali.wordpress.com/2018/04/07/இமைக்கணம்-ஜெயமோகன்-நிகழ/