ஜெ,
நான் தொடர்ந்து
தத்துவ ஈடுபாட்டுடன் இருப்பவன். எங்கள் அமைப்பில் தத்துவ முகாம்களும் உண்டு. நிறைய
கேள்விகேட்பவன் நான். என்னைப்பொறுத்தவரை தத்துவக்கல்வி என்பது சந்தேகத்திலிருந்து தொடங்குகிறது
என்று நினைத்திருந்தேன். சந்தேகமே தத்துவ அறிதலின் உச்சநிலை என்ரு சொல்லி வாதாடியிருக்கிறேன்.
ஐ ஏம் எ ஸ்கெப்டிக் என்பது என்னுடைய வழக்கமான பேச்சு. ஆனால் சந்தேகம் அறியாமையின் ஒரு
நிலையே ஒழிய அறிவின் ஒரு நிலை அல்ல என்று இமைக்கணத்தில் கிருஷ்ணன் சொல்லும் வரி என்னைத்
திகைக்கச்செய்தது. அறிவை நம்பி ஐயங்களை எதிர்கொள்பவன் தன்னை மீட்டுக்கொள்கிறான். ஐயத்தை நம்பி அறிவை எதிர்கொள்பவன் ஐயத்தையே பெருக்கிக்கொள்கிறான்.
என்றவரி ஓங்கி அறைந்ததுபோலிருந்தது. நான் முற்றிலும் புதிதாக சிந்திக்கவேண்டும்
என்று நினைக்கிறேன்
ராஜ்