Thursday, April 26, 2018

காவியம்




ஜெ

சில வரிகல் ஒட்டுமொத்தமாக பழைய நாவலைச் சென்றடைவது ஆச்சரியமானது. கொடும்பழியிலிருந்து, ஆறா வஞ்சத்திலிருந்து, ஆற்றொணாத் துயரிலிருந்தே பெருங்காவியங்கள் எழுகின்றன என்கிறார். பராசரர். வியாசர் துயரத்துடன் கண்ணீருடன் கன்யாகுமரிக்குச் சென்றது நாடெங்கும் அலைந்தது ஏன் என்பதை இப்போது பார்க்கமுடிகிறது. ஒரு சொல் மிச்சமிருக்கவேண்டும் என்கிறார். அந்தச்சொல் ஓம். அதை அந்த யானை வந்து அவருக்கு அளிக்கிறது. மழை அனைத்துக் குருதியையும் சாம்பலையும் கழுவிச்செல்கிறது. அனைத்து மாசுகளையும் மண்ணுக்கு உரமாக்குகிறது என்ற வரி காவியத்தையே குறிப்பிடுகிறது. வியாசபாரதம் மகாபாரதப்போரின் குருதி அனைத்தையும் மண்ணுக்கு உரமாக்கிய மழை தானே?

மகாதேவன்