Saturday, April 14, 2018

பார்வைக்கோணம்




பூசலில் முடியாத நீளுரையாடல்களை மானுடரில் இரு சாரார் மட்டுமே நிகழ்த்தமுடியும். ஒருவருவருக்கொருவர் முழுமையாக நடித்துக்கொள்ளும் அளவுக்கு நட்போ மதிப்போ அன்போ காதலோ கொண்டவர்கள். ஒருவர் ஆணவத்தை பிறிதொருவர் முற்றாக ஏற்குமளவுக்கு பணிந்தவர்கள்.- சில சமயம் வெண்முரசில் வரும் இத்தகைய வரிகளை ஒரு கோட் ஆக நான் வாட்சப்பில் வைத்துக்கொள்வதுண்டு. இதைப்பற்றி பலர் என்னிடம் கேட்டார்கள். நான் இது ஒரு நெகெட்டிவ் ஸ்டேட்மெண்ட் தான் ஆனால் இதில் ஓர் உண்மை உள்ளது என்றேன். இது முழுக்க உண்மையா என்றால் ஒரு பார்வைக்கோணம் என்றே சொல்லலாம். ஆனால் இதை ஒருவகையான ரியாலிட்டியாக எடுத்துக்கொண்டு மேலே வாழ்க்கையை யோசித்தால் பலவகையான சிக்கல்களிலிருந்து தடுக்கமுடியும். ஒரு நிதானத்தை அடையமுடியும். எப்போதும் நாம் உணர்வது இதுதானே? கம்யூனிகேஷன் கேப். அது தீர்க்கப்படவேண்டிய பிரச்சினை அல்ல. அது ஒரு எக்ஸிஸ்டென்ஷியல் கிரைஸிஸ்.

மாதவ்