Friday, April 27, 2018

இமைக்கணம்



அன்பு ஜெ , 

வெண்முரசை தொடர்ந்து கோர்வையாக படிக்கமுடியாவிட்டாலும்முடிந்த அளவு படித்து வருகிறேன் .இமைக்கணம் , குறிப்பாகசமீபத்திய அத்தியாயங்கள் ஆழமான  தத்துவங்களைஅற்புதமானகற்பனையுடன் எப்போதும் உச்சத்திலேயே நிற்கும் ஒரு discourse ஆகமுன்வைக்கிறது .

வாசகர் மனதில் ‘அப்படியென்றால்’ என்று தோன்றும் கேள்வியைஅடுத்த சிலவரிகளிலேயே கேட்டு பதிலும் அளித்துவிடுகிறீர்கள்.வெண்முரசுக்கான நியாயமும் அதனுள்ளேயே , இந்தவிவாதங்களுடனேயே பிணைந்துகொள்கிறது .

இந்த விவாதங்களை பற்றியே இன்னும்
மனதில் அசை போட்டுக்கொண்டிருக்கிறேன் . எந்த ஒழுங்கும்இல்லாமல் மீண்டும் இமையத் தனிமை கட்டுரைகள் , சுவாமிவியாசப் பிரசாத் வேதாந்த உரைகள் , குரு நித்யா  கட்டுரைகள்என்று படித்துக்கொண்டிருந்தேன்.

என்னதான் சொற்பெருக்கினாலும் அவற்றினிடையே ஒருஅமைதியும் குடி கொண்டுள்ளது .ஏதோ ஒன்றை நோக்கிஇன்னுமொரு எட்டு வைத்தது போல உணர்கிறேன்.

இன்று உங்கள் பிறந்தநாளும் கூட , வாழ்த்துகளும்,வணக்கங்களும் ,அன்பும் .

கார்த்திக் 
சிட்னி