Monday, April 9, 2018

பிடிவாதம்




ஜெ

கர்ணனிடம் கிருஷ்ணன் சொல்லும் கீதையில் ஒருவரி. மனிதர்கள் தங்களுக்குரிய எதையும் விடுவதில்லை என்று. துக்கம் நோய் அறியாமை போன்றவற்றைக்கூட பிடிவாதமாக தக்கவைத்துக்கொள்கிறார்கள். அதை அனுபவமாக உணரவேண்டுமென்றால் வீட்டில் வயதானவர்கள் இருக்கவேண்டும். அவர்கள் தங்கள் பொருட்களை மட்டுமல்ல கெட்டகுணங்களை மட்டுமல்ல துன்பங்களைக்கூட பிடிவாதமாக வைத்துக்கொள்வார்கள். மாற்றவே முடியாது. என் அம்மா தாத்தாவைப்பற்றிச் சொல்லும்போது விடுடா, இதெல்லாம் இல்லைன்னா அவரு இல்லை என்று சொன்னால். அதைத்தான் நினைத்துக்கொள்கிறேன். கிருஷ்ணன் சொல்வது நினைத்தால் விட்டுவிடலாம், பறந்துவிடலாம் என்றுதான். எவரையும் எதுவும் பிடித்துக்கொண்டிருக்கவில்லை. இவர்கள்தான் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்

ஸ்ரீனிவாஸ்