வியாசனிடம் அவருடைய வழி தியான யோகம் அல்ல அவர் கவியோகிதான்
என்று சொல்லும் கிருஷ்ணன் சொல்லும் உவமை அழகானது. விண்ணுக்கெழும் ஆணையை அனலுக்கு அளித்ததே மண்ணில்வீழும் ஆணையை மழைக்கு அளித்தது. நெருப்பு
எல்லாவற்றையும் எரித்து தானும் அணைந்து விண்ணுக்குப்போகிறது. அதுவே தியானயோகம். மழை
எல்லாவற்றையும் முளைக்கவைத்து இங்கேயே வளம் சேர்க்கிறது. அதுதான் கவியோகம். அந்த வேறுபாட்டையே
கண்ணன் சொல்கிறார். தன் சொல்லில் எழுந்த மெய்யை கவிஞன் தன் கனவால் ஒப்புகையில் அதுவே முதற்சான்றாகும். ஆம் ஆம் ஆம் என மும்முறை ஒப்பி பிரம்மம் மறுசான்றுரைக்கும் என்று கண்ணன் வியாசருக்கு
அளிக்கும் உறுதி ஒவ்வொரு கவிஞனுக்கும்தான்
செல்வராஜ்