Thursday, April 26, 2018

இமைக்கணம் – Open your Eye



நான் மார்வெல் திரைப்படங்களின் ரசிகன் (கவனிக்கவும், காமிக்சுகளுக்கு அல்ல, திரைப்படங்களுக்கு மட்டுமே... காமிக்ஸ்களைப் படித்ததில்லை. படிக்க வேண்டும்!!!). அவற்றிலிருந்து வழமையான அதிமானுட சாகசங்களை மீறிய சிலவற்றை அனுபவிப்பவன். உதாரணமாக xmen படங்களின் Dr. Charles Xavier கூறும் வசனங்களில் இருந்து காந்தியத்துக்கு தொடர்புபடுத்தியிருக்கிறேன். சமயங்களில் இதெல்லாம் அவை கூறுபவற்றுக்கு மேல் நானாக எனது அறிதல்களைச் சுமத்துகிறேன் என என்னை நானே கடிந்து கொண்டதும் உண்டு. அபத்தமாக உணர்ந்ததும் உண்டு. ஆயினும் அத்தகைய மேலதிக அனுபவங்கள் அத்திரைப்படங்களை மனதுக்கு மிக நெருக்கமாக்கியிருக்கின்றன. இத்தகைய மேலதிக கருத்துக் குவிதலை அவர்கள் தெரிந்து வைக்கிறார்களா அல்லது யதார்த்தமாக அமைந்து விடுகிறதா என்ற குழப்பம் வெகு நாட்களாக உண்டு. அதற்கு விடையளிப்பது போல் வந்த ஒரு படம் Dr. Strange. என்னடா இமைக்கணத்தைப் பற்றி தலைப்பிட்டு விட்டு மார்வெல் படங்களைப் பற்றி பேசுகிறேனே என எண்ண வேண்டாம். வியாசர் ‘சூக்ஷ்மம்’ எனும் சுனைக்குள் இறங்கி சுகனைக் கண்ட அனுபவங்களைப் படித்த போது, குறிப்பாக “எண்ணிறந்தமை என்றால் என்னவென்று ஒரு நோக்கில் கண்டான். எண்ணிப்பகுப்பதே காலம். காலமின்மையில் கோடிகோடி வியாசர்கள் கோடிகோடி சுகன்களை பெற்றனர். கோடிகோடி வியாசர்கள் கோடிகோடி சுகன்களை இழந்தனர். கோடிகோடி வியாசர்களை கோடி கோடி சுகன்கள் பெற்று இழந்தனர். சுகன்களை கொன்றனர் வியாசர்கள். வியாசர்களை கொன்றனர் சுகன்கள். வியாசர்களிலிருந்து சுகன்கள் முளைத்தெழுந்தனர். சுகன்களிலிருந்து வியாசர்கள் எழுந்தனர்.
ஒன்றுபிறிதே என்றானவர்கள். ஒன்று பிறிதிலாதவர்கள். கணம்கோடிப் பெருகி கணம்கோடி அழிந்து அழிவின்மையாகி நின்றவர்கள். நெஞ்சிலறைந்து அழுதனர் முடிவிலாக் கோடியர். உவகைகொண்டு நகைத்தனர் எண்ணிலாக் கோடியர். முடிவிலாது பெருகுகையில் அழிவும் ஆக்கமும் துயரும் உவகையும் ஒன்றே. அனைத்தும் இன்மையே. இன்மையும் இருப்பும் ஒன்றே.
பெருகிப்பெருகி விரிந்து விரிந்து சென்றான் வியாசன். அவன் கைகள் திசைகளின் முடிவிலி நோக்கி நீண்டன. கால்கள் ஆழத்தின் அடியிலி நோக்கி சென்றன. தலை விண்ணின் அலகிலி நோக்கி எழுந்தது. கணம்கோடி என பெருகும் தன் உடலின் ஒவ்வொரு அணுவும் ஒரு சுகன் என்று உணர்ந்தான். ஒவ்வொரு சுகனும் ஒரு முடிவிலாப் பேருருவன் என்று கண்டான். அவ்வுடலில் ஒவ்வொரு அணுவும் தானே என்று அறிந்தான்.” என்பதை வாசித்த போது கீழ்க்காணும் காட்சிகள் நினைவுக்கு வந்தன.



இதில் வரும் வசனங்கள் முக்கியமானவை.

The Ancient One: You're a man looking at the world through a keyhole. You've spent your whole life trying to widen that keyhole. To see more. To know more. And now on hearing that it can be widened, in ways you can't imagine, you reject the possibility.
Dr. Strange: No, I reject it because I do not believe in fairy tales about chakras, or energy, or the power of belief. There is no such thing as spirit! We are made of matter and nothing more. We're just another tiny, momentary speck in an indifferent universe.
The Ancient One: You think too little of yourself.
Dr. Strange: Why are you doing this to me?
The Ancient One: To show you just how much you don't know. Open your eye! (கண்கள் எனச் சொல்லவில்லை. கண் என்று தான். இதன் பிறகு அவர் Dr. Strange –ன் நெற்றியில் கைவைப்பார்.)
The Ancient One: You think you know how the world works? You think that this material universe is all there is? What is "real"? What mysteries lie beyond the reach of your senses? At the root of existence, mind and matter meet. Thoughts form reality. This universe is only one of an infinite number. Worlds without end. Some benevolent and life-giving, others filled with malice and hunger. Dark places where powers older than time lie, ravenous and waiting. Who are you in this vast multiverse, Mr. Strange?

இதில் Dr. Strange உடலில் இருந்து வெளியேறி தன்னைத் தானே காணும் காட்சியில் வரும் உடல்களின் எண்ணிக்கை (ஐந்து) முதற்கொண்டு இந்திய மரபின் தாக்கம் இவற்றில் அதிகம்.

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்