Saturday, April 21, 2018

ஆரா



அன்புள்ள ஜெ,

இன்றைய வெமு வில்..

துயர்கொள்கிறான் கவிஞன். பெரும் வதைபட்டு உழல்கிறான். கைவிடப்படுகிறான், பழிக்கப்படுகிறான், தனிமை கொள்கிறான், வழிதவறுகிறான்.. பெரும்பழிகளைச் சுமக்காத கவிஞன் இல்லை. வஞ்சமில்லாமல் எரிபவன். வஞ்சினங்களைத் தான் சுமப்பவன். அறமீறல்களை, ஆராப்பிழைகளை  ஆற்றுபவன் அவன். ஆனால் அவை  ...
 என வருகிறது. இதில் ஆராப்பிழைகளை என்பது ஆறாப்பிழைகள் என வரவேண்டுமா?

இல்லையேல் ஆராப்பிழைகளை என்பது தான் சரியானதா?

அன்புடன்,
ராஜகோபாலன் ஜா,
சென்னை


அன்புள்ள ராஜகோபால்

ஆரா என்றால் கடுமையான, எதிர்மறை உச்சம் கொண்ட, தாளமுடியாத என்று பொருள் உண்டு. [வையாபுரிப்பிள்ளை அகராதி] திகட்டாத என்னும் பொருள் பின்னர் கொண்டு எடுக்கப்பட்டது. ஆராவமுதன். ஆராபத்தியம் என்னும் சொல் வைத்தியத்தில் உள்ளது. கடுமையான பத்தியம், தாளமுடியாத பத்தியம் என்று பொருள். ஆராப்பழி என்றால் உச்சகட்டப் பழி

ஜெ