ஜெ
ஜனகருக்கும்
சுலபைக்குமான உரையாடல் ஓர் உபநிஷதம்போல கீதைக்கு இணையான விளக்கமாக அமைந்திருந்தது.
கிருஷ்ணன் கிட்டத்தட்ட ஜனகர் சொன்னதையே தன் சொல்லாக இங்கே சொல்கிறார். கீதையின் கர்மயோகத்தில்
ஜனகன் முதலியோர் ஆசைகளை அகற்றி கர்ம்யோகம் செய்தனர் என்ற வரி வரும். இதற்கு விளக்கமளிப்பவர்கள்
சீதையின் தந்தையாகிய ஜனகர் என்றே சொல்வார்கள். அவர் ராமனுக்குப் பெண்கொடுத்ததைப்பற்றிச்
சொல்வார்கள். ஜனகர்களின் வரலாறு எவரும் சொல்வதில்லை. ஜனகர் ஏன் ராஜரிஷி என்றும் சொல்வதில்லை.
ஜனகர் உபநிஷத கதாபாத்திரம். அவரை இந்நாவலில் கொண்டுவந்தது அழகான நுட்பம்
ராமச்சந்திரன்