Friday, May 1, 2015

விழியின்மை



ஆசிரியருக்கு ,

     தர்மன்  திருதிராஷ்ற்றனுக்கு முன்னர் ஒரு கடிதம் எழுதியிருப்பான் , அது வரனவாத கொலை முயற்சி தொடர்பாக. அது ஒரு சதிச் செயல் என்றும் அதற்கு  மகதம் தான் காரணம் எனவும் கூறி இருப்பான். அது  திருதிராஷ்ட்ரன் கேள  விரும்பிய செய்தி.

  இப்போது திருதிராஷ்ட்ரன் துரியனை அடித்ததும் ஒன்று தெரிகிறது , அது அவன் அறிய விரும்பிய செய்தி அவ்வாறே அவனுக்கு எழுதப் பட்டது , அது அவன் நம்ப விரும்பிய உண்மை , அவாறே அதில் கூறப் பட்டது. ஆனால் உண்மை சுவடற்று அப்படி சாகாது, கடிதம் எழுதும் நேரத்தில் தர்மனுக்குத் தெரியும் இது எதையும் நிறுவப் போவதில்லை , இது திருத்ராஷ்ற்றனுக்கு சற்று நேர ஆசுவசத்தையே தரும் , ஆனால் உண்மை பின் எப்படியும் வெளிப்படும். 

நான் மன்னித்து விட்டேன் , நான் இதை பொருட்படுத்த வில்லை, உறவு திரும்பக்கூட இதோ என் தரப்பில் ஒரு நாடகக் கடிதம். இக்கடிதம் அல்ல முக்கியம் , அதற்குப்பின்  தர்மன் வெளிப்படுத்த விரும்பிய அவன்  எத்தனம். இது ஒரு victim 's amnesty.   

  நாங்கள் குருடர்கள் என துரியனையும் சேர்த்து திருதராஷ்ட்ரன் தர்மனிடம்  சொல்கிறான். நிகழ்வின் அசலை அறிந்தவன் துரியனை அடிக்கிறான் , கடிதத்தின் அசலை அறிந்தவன் அனைவரையும் அணைக்கிறான். திருதராஷ்ட்ரன் நீரெனக்  கனிந்து நிற்கிறான் , தர்மன் உச்சத்தில் உயர்ந்து நிற்கிறான்.

கிருஷ்ணன் .