Friday, December 8, 2017

வெண்முரசு - வண்ணக்கடல்ஏழ்தெங்க நாட்டு பழையன் அவையில் நுழைந்த இளநாகன், உன் வெண்குடை நாய் குடை என்று பன் பாடி அதற்காக அவன் துரத்தப்படுவதால் மதுரைக்கு தப்பி ஒட அங்கு இருந்த அஸ்தினபுரம் போகிறான். இளநாகன் பஃறுளி ஆற்றைகடந்து தென் மதுரையை அடைகிறான், பஃறுளி ஆறு மறைந்த குமரிகண்டத்தில் ஓடிய ஆறு, ஏழ்தெங்க நாடும் குமரிகண்டநாடு,  காட்சிகள் விரிப்பால் மனம் மிக எளிதாக குமரிகண்டத்தில் ஒன்றி விடுகிறது. சதசிருங்கத்திலிருந்து தனது ஐந்து மைந்தர்கள் உடன் குந்தி நகர் திரும்பும் வழியில் நதியில் எழுந்த கார்க்கோடகன் எனும் நாகம் பிருதையின் சூரியபுதல்வன் இருக்கும் இடத்தை காட்டி விதி பயனை உரைத்து மறைந்தான். கதையும் காட்சி விரிப்பும் காவிய நடையில் நகர்வதால் சற்றே கடினமான தோன்றாலாம்.. 

"விண்பனித்து திரண்ட முதல்துளியென 
சிற்றுடலில் விழித்த பிரக்ஞை
உணர்வு குடியேறா வண்ணங்களில் 
உவமை நிகழா வடிவங்களில் 
தன்னைக் கண்டு 
நீ பிரம்மம் என்றது"


இதை போன்ற வரிகளை வாசிக்கும் அதே வேகத்தில் கற்பனை செய்வது கடினமே ஆக இரு முறை கூறிய வாசிப்பு தேவையாகிறது. துரியோதனன் பீமன் மார் போர் செய்கிறார்கள் வெற்றி யாருக்கும் அல்ல இறுதி என் உயிர் யாருக்கேனும் தருவதாக இருந்தால் என் தமயன் துரியோதனன்க்கு அளிக்கிறேன் என்று பீமன் வாக்கு சொல்கிறான். ஆனால் விண்ணாளும் தெய்வங்கள் தங்கள் விளையாட களங்களும் காய்களும் அல்லவா தாயர் செய்கின்றனர் அவர்கள் ஆட்டிவிக்கும் பாவைகள் அல்லவா இவர்கள், அவை இவர்களை எதிரெதிர் களத்தில் அல்லவா நிறுத்துகிறது. துரியோதனனை கொல்ல வந்த கரடியிடம் இருந்து அவனை காபற்றியதன் மூலம் வெறுப்பும் குரோதமும் அணல் என மேல் எழுகிறது வளர்கிறது. பரசுராமரும் பீஷ்மரும் சரத்வானும் மட்டுமே வெல்ல முடிந்த மாபெரும் வீரனை இந்த சமுகம் எவ்வளவு எளிமையாக மிக மூர்க்கமாக காயபடுத்துகிறது குலம் இனம் என்று எந்த ஒரு மாவீரனையும் இழிந்துரைக்கிறது இந்த சமுகம், பிறந்த நாள் முதல் புறக்கணிப்பும் அவமரியாதைகளையுமே சந்தித்து கூனி குறுகும் துரோணருக்காக அகம் நீர் குமிழ்னென உடைந்து கனக்கிறது. வில் கொண்டு வெல்ல முடியாத மாவீரனை சொல் கொண்டு மிக மென்மையான தாக்கி அவனை நிலைகுலையவைக்கிறதே சமுகம். துரோணர் எதிர்காலத்தில் என்னவாக ஆவார் என்று தெரியவில்லை ஆனால் அவர் அகத்தில் இருக்கும் ஆற்றாமை மூர்க்கம் கொண்டு சினந்தெழும் போது துரோணர் முன் எதுவும் நிற்க இயலாது என்று தோன்றுகின்து.


நடப்பவை அனைத்தும் வரவிருக்கும் பாரத போருக்காக என்பதால் எதிர் எதிர் நிற்க போரவர்களை அகம் எளிதில கண்டைய விழைகிறது , துரியோதனன் - பீமன், அர்ஜுனன் - கர்ணன், ஆனால் பீமன் வாக்கு தன் உயிர் தன் தமயன் துரியோதனன்க்கு என்றும் அஸ்வத்தாமனை எந்த நிலையிலும் கொல்ல கூடாது என்ற துரோணர் சொல்லும் இருக்கிறது அப்போது இறுதியில் நிகழபோவது என்ன என்பது இந்த காய்களை நகர்த்தும் பிரம்மமே அறியும். கொடை என்றால் அது கர்ணன் என்று நாம் அறிந்ததே அப்படி பட்ட கர்ணனின் கொடை வெண்முரசுசில் எவ்வாறு அறிமுகம் ஆவர் என்று பெரிதும் எதிர்பார்த்தேன் அது ஒரு அருமையான தருணம் எதிர்பார்க்காத இடத்தில் சட்டென்று நிகழ்கிறது அது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.  வாழ்நாள் எல்லாம் அவமரியாதையும் புரக்கனிப்பும் சந்தித்த துரோணர் கர்ணனை பார்த்து நான் சூதனுக்கு கற்ப்பிப்பது இல்லை என்று சொல்லும் தருணம் ஏதோ நெருடல் கொடுக்கிறது. இந்த புவியியல் அவமரியாதை, புரக்கனிப்புக்கு நிகரான நரகம் வேறில்லை என்று ஒர் இடத்தில் வருகிறது அதே அவமரியாதை துரோணரக்கு இனையாக கர்ணன் அடையும் போது துரோணரக்கு அகம் உருகியதை விட கர்ணனுக்கு உடைந்து விம்முகிறது இயல்பாகவே அந்த இடத்தை நாம் அடைய வேண்டும் என்பது தான் கர்ணன் பாத்திரம் பளுபெரும் அது தன்னிச்சையாக நடக்கிறது அல்லது எழுத்தாளர் நுட்பம். மீண்டும் ஏகலைவன் துரோணரால் புரக்கனிக்கபடுகிறான் ஏகலைவன் துரோணரை அக கண் கொண்டு வித்தை பழகிவிட்டதால் குரு கனிக்கையாக கட்டைவிரல் பெற்ற சபையில் ஏகலைவன் அன்னையின் தீ சொல் துரோணரை படைகலத்தில் வேரறுக்கு ஆற்றல் கொண்டது அந்த ஊழ் என்றோ ஒரு நாள் அவர் முன் எழும். குரோதமும் பொறாமையும் இயல்பாகவே இரு அணிகளை எதிர் எதிராக பிரிக்கிறது அது களம் காணும் நிகழ்வில் நிகழ்கிறது. வண்ணக்கடல் புரக்கனிக்கபட்டவர்கள் வழியாக தொடங்கி முடிகிறது அதே சரடு தான் மஹாபாரதத்தின் மய்யத்தை உருவாக்கப் போவதாகவும் உள்ளது.


வண்ணக்கடல் வாசிக்க தொடங்கியதில் இருந்து " மண்மறைந்த ", "மண்மறையும்" இந்த சொல் மட்டுமே நளொன்றுக்கு பத்து முறையாவது அகத்தி எழுகிறது ஏன் என்று அறிய முடியவில்லை.
நன்றி.

ஏழுமலை.