அன்புள்ள ஜெயமோகன்
இந்த நாவல் முழுக்கவே
வார்த்தைகளால் மாறிமாறி உளவு பார்த்துக்கொள்வதாகவே இருக்கிறது. ஒருவரின் உள்ளத்தை இன்னொருவர்
இழுத்து வெளியே போடுகிறார். போருக்கு முன்னால் என்னென்ன வகையான மனநாடகங்கள் நடந்தன
என்று சொல்வதுதான் இந்த நாவலின் நோக்கம் என நினைக்கிறேன். ஒவ்வொருவருக்கும் சொல்வதற்கு
சில உள்ளன. அதற்கு அப்பால் அனைவருக்கும் ஆழத்தில் வேறு ஒன்றும் உள்ளது. அந்த இரண்டையும்
கலந்து கலந்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அசலை போல ஒரு கதாபாத்திரம் எழுந்துவந்து
கிழித்து தூக்கி வெளியே போடும்போது இது கொஞம்தான் இன்னும் நிறைய உள்ளே இருக்கிறது என்று
எண்ணசெய்வதே நாவலின் வெற்றி என நினைக்கிறேன்
மணி