இனிய ஜெயம் ,
இதோ சிறகுகள்  உலரும் வண்ணம் கதகதப்பு கொண்டெழும் பீம்சென் ஜோஷி அவர்களின் குரல் .
தழல் அம்பைக்கான பாடல் ,  குளிர் தரு காந்தாரிக்கான பாடல் , நளிர் திரௌபதிக்கான பாடல் ,
அன்னையர்  அனைவரையும் துதிக்கும் பாடல் ,
குறுதிச் சாரலின்  கொண்டலை திரட்டும் பாடல் .
பவதாரிணி ,  மஹா தவ வாணி ,துக்க மர்த்தினி .
சீனு

