Tuesday, December 19, 2017

தர்மஷேத்ரே குருஷேத்ரே



ஜெ

குருஷேத்ரத்தை ஒரு பெரிய அன்னையாக நீங்கள் உருவகிக்கிறீர்கள் என்பது இரண்டாவது அத்தியாயத்தை வாசித்தபோது தோன்றியது தவறாகக்கூட இருக்கலாம். முதலில் அந்நிலம் அன்னையின் பசி அணையாத வயிறாகச் சொல்லப்பட்டது. பின்னர் வாய் சொல்லப்பட்டது. அதன்பின் யோனிக்குழி சொல்லப்படுகிறது. அங்கு மடிந்தவர்கள் அனைவருமே மீண்டும் பிறந்தெழுவார்கள் என்பதுதான் நம் நம்பிக்கை. அவர்களுக்கு அந்த மறுபிறவியில் மீட்பு உண்டு. அன்னை எவரையும் கைவிடுவதில்லை. குருஷேத்ரம் கர்மபூமி எனப்படுகிறது. தர்ம பூமி என்றும் சொல்லப்படுகிறது. தர்மஷேத்ரே குருஷேத்ரே என்பது கீதையின் வரி அல்லவா?


ஜெயராமன்