ஜெ,
நீதி என்பது என்ன
என்ற கேள்வி பலமுறை வெண்முரசிலே வருகிறது. அதையெல்லாம் தனித்தனியாகத் தொகுத்து பார்க்கவேண்டுமென
நினைத்துக்கொண்டே இருக்கிறேன். நீதி என்பது தனிமனிதனின்பொருட்டு சமூகம் பழிவாங்குவதே
என்பது ஒரு பார்வை. தனிமனிதனின் பொருட்டு சமூகம் செய்யும் தண்டிப்பு என்றும் சொல்வார்கள்.
ஆனால் தனிமனிதம் சார்ந்த ஒரு அறவுணர்வு ஈதரில் அப்படியே நின்றிருந்து தலைமுறைகளுக்குச்
செல்வது என்றும் ஆகவே மன்னிப்பதற்கெல்லாம் தனிமனிதர்களுக்கு உரிமையில்லை என்றும் தனிமனிதர்கள்
மன்னிப்பு செய்வது அவர்களுக்கு தனிப்பட்டமுறையிலே மட்டுமே உதவிகரமானது என்றும் வெண்முரசிலே
வாசித்தபோது ஒரு மன எழுச்சி எழுந்தது. நண்பர்களிடம் அதை விரிவாக விவாதித்தேன்
ஜெயராஜ்