Monday, December 18, 2017

காலபூமிஜெ,

குருதிச்சாரல் சிறப்பாகத் தொடங்கியிருக்கிறது. குருஷேத்ரம்தான் இனி கதைக்களம். அதை விரிவாகவும் நுணுக்கமாகவும் அறிமுகம்செய்திருக்கிறீர்கள். ஏற்கனவே முதற்கனலிலேயே குருஷேத்ரம் வந்துவிட்டது. அதை மீண்டும் விவரிக்கிறீர்கள். அப்போது மகாபாரதப்போர் முடிந்து மொத்த உடசல்களையும் சிதல்கள் தின்றுகொண்டிருக்கின்றன . இப்போது முந்தையபோர்களில் எஞ்சியதைத் தின்றுகொண்டிருக்கின்றன. கரையான்கள்தான் காலம். குருஷேத்ரம் காலபூமி


சரவணன்