Tuesday, December 19, 2017

குருதிக்குளம்



ஜெ,

தேவிகை குருஷேத்ரத்தை அணுகும்போது கேட்கும் பறவை ஒலி என்பது ஒரு வீரல் கல்லால் வேலைக் கூர்தீட்டும் ஒலி என்ற வரியை நான் சாதாரணமாகக் கடந்துசென்றேன். பிறகுதான் அந்த வரி ஞாபகம் வந்தது. அட , கூர்மையான இமேஜாக இருக்கிறதே என நினைத்தேன். அந்த அத்தியாயத்தை மீண்டும் வாசித்தேன். எல்லா வரிகளிலுமே அந்த கூர்மை உள்ளது. எல்லாமே படிமங்களாக ஆகியிருக்கின்றன. முள்மரங்கள் அதைக்கீறிக்கொண்டே இருப்பது. காலால் அழுத்தினால் குருதிநிணம் கசியுமா என்று தேவிகை நினைப்பது. அந்தக்குளமே ரத்தக்குளம்தான்


அருண்