Friday, December 15, 2017

வரிகள்



ஜெ

பெரும்பாலும் வெண்முரசின் நிகழ்வுகள் வேகமாகச் செல்கின்றன. நிறையப்பக்கங்கள் இருப்பதனால் அனைவரும் படித்துச்செல்லவேண்டும் என்பதற்காக என நினைக்கிறேன் நீங்கள் கதையொழுக்கை முக்கியமாக கருதுகிறீர்கள். இதனால் பலசமயம் கதாபாத்திரங்களின் எண்ண ஓட்டங்களில் வரும் ஆழமான வரிகளை நாம் கவனிக்காமலேயே சென்றுவிடுகிறோம். உதாரணமாக இந்தவரி


இது யயாதி திருமணம் என்னும் சடங்கைப்பற்றி நினைப்பது. யயாதிக்கு அந்த திருமணம் ஒரு பெரிய திருப்புமுனை. அவர் வரை வந்துசேந்த அவருடைய மூதாதையரின் ரத்தமே மாறிவிடுகிறது அப்போது. ஆனால் எல்லா திருமணங்களும் அப்படித்தானே?

சடங்குகளென்பதே ஒவ்வொரு எளிய அன்றாடச் செயலையும் வாழ்வெனும் பெருக்கில் பொருத்தி மேலும் மேலும் பொருட்செறிவு அடையவைப்பதற்காகத்தான்.

என நினைக்குமிடத்தில் அந்த சிந்தனை ஒரு முழுமையான வட்டமாக ஆகிவிடுகிறது. ஆனால் நாவலில் இது ஒரு மிகச்சிறியதுளியாகக் கடந்துசெல்கிறது


மனோகர்