Saturday, December 30, 2017

கள்ளமற்ற தன்மை



பேரிழப்பு அணுகுவது அவருக்கே. எனவே அதன் கருத்துளியும் அவரிலிருந்தே எழுந்திருக்கும் – இது தாரை காந்தாரியைப்பற்றிச் சொல்லும் முதல் விமர்சனம். ஊழ் கொள்கையின்படி இதுவும் உண்மை. இதை மகாபாரதத்தில் இறுதியில் கண்ணனும் காந்தாரியிடம் சொல்கிறார் என நினைக்கிறேன். தாரை மகாபாரதத்தில் இல்லாத கதாபாத்திரம். அப்படி ஒருகதாபாத்திரத்தை விகர்ணனின் மனசாட்சியின்குரலாக உருவாக்கியிருக்கிறீர்கள். விகர்ணன் ஓர் அரசியல்சூழ்மதியன்போலப்பேசுகிறான். அவனுக்குள் இருப்பது தாரை உருவாக்கிய கள்ளமற்ற தன்மையின் அறச்சார்புதான்


மகாதேவன்