உள்ளம் என்பது அன்னத்தின் கால். அது இயங்குவதை அன்னம் அறியாது. வெய்யோனில் வரும் இந்த வரியை நான்
முன்பு பலமுறை வாசித்திருந்தேன். ஆனால் நேற்று ஒரு திரைப்படம் பார்க்கும்போது அதை மீண்டும்
உணர்ந்தேன். படம் சாதாரணமான படம்தான். ஆனால் அதில் அன்னம் செல்லும் காட்சி வருகிறது.
அன்னம் அசையாமல் மிதக்கிறது. ஆனால் உள்ளே கால் அலைந்துகொண்டிருக்கும் என நினைத்துக்கொண்டேன்.
வெண்முரசு வாசகரிடம் விட்டுச்செல்லும் இத்தகைய கவித்துவமான வரிகளால்தான் நினைவுகூரப்படும்
என நினைக்கிறேன்
ஜெயராமன்