Saturday, December 30, 2017

பெண்கள்



ஜெ

மகாபாரதம் பலமுறை கேட்டிருந்தாலும்கூட திரௌபதி வஸ்திராபகரணம் பற்றி கௌரவர்வீட்டுப் பெண்களும் மற்ற பெண்களும் என்னதான் எண்ணினார்கள், அவர்களெல்லாம் எப்படி எதிர்வினையாற்றினார்கள் என்பதெல்லாம் நான் யோசிக்கவேஇல்லை. முதன்முதலாக பன்னிரு படைக்களத்தில் அந்த ஆடைகள் பெண்களால் அளிக்கப்பட்டவை என்று வாசித்ததும் மிகப்பெரிய மன எழுச்சியை அடைந்தேன். என் அம்மாவிடம் அந்த கேள்வியைக்கேட்டேன். பானுமதி காந்தாரி முதலான கற்பரசிகள் என்னதான் செய்தர்கள். அம்மா சொன்னார் அவர்கள் பதிவ்ருதைகள் அவர்கள் கணவர்களை எதிர்க்கமாட்டார்கள். ஆனால் நான் பன்னிருபடைக்களம் கதையைச் சொன்னதும் அம்மா ஆமாம் அப்படித்தான் நடந்திருக்கும் என்று சொன்னாள். இப்போது காந்தாரி, அசலை பானுமதியின் மனநிலைகளை, அவர்கள் கணவர்களைப்புறக்கணித்ததைச் சொன்னபோது ஆமாம் சரியாகத்தான் உள்ளது என்றுதான் அம்மா சொன்னார். இந்தக்கதை மகாபாரதத்திலே இல்லை என்று நான் சொன்னேன். இருந்திருந்தால் இப்படித்தான் இருந்திருக்கும் என்று அம்மா சொன்னாள். ஆச்சரியமாக இருந்தது


சித்ரா