ஜெ
காந்தாரியின் கதாபாத்திரம்
மிக அழகாக இப்போதுதான் உருவாகி வருகிறதுபோல இருக்கிறது. ஆப்ரீக்காவின் பேரன்னை என்ற
சிலைகளில் உள்ள வடிவம் ஞாபகம் வருகிறது. ஆயிரம் பிள்ளைகளைப்பெற்ற அன்னை. அப்படிப்பட்ட
அன்னையின் மனநிலை என்னவாக இருக்கும். ஒரேசமயம் அன்னையகவும் இருக்கிறாள். அதேசமயம் அறச்செல்வியாகவும்
இருக்கிறாள். இப்போது வாசிக்கும்போது ஆரம்பம் முதலே அவளுடைய கதாபாத்திரம் நுட்பமாக
உருவாகிவந்திருக்கிறது என்று தெரிகிறது. தாலிப்பனையுடன் சம்பந்தப்படுத்தி அவளை நான்
இப்போதுதான் பார்க்கிறேன். தன்னுடைய தாய்மையில் தன் பிழையை அவள் கண்டுகொள்ளும் இடம்
உச்சமானது
மகேஷ்