Thursday, April 5, 2018

சாமானியமும் விசேஷமும் 3




ஜெ

சாமானியமும் விசேஷமும் பற்றிய பதில் பட்டென்று ஒரு பொறிபோலப் புரிந்தது. நாம் தத்துவம் சார்ந்த எதைப்பேசினாலும் உடனே சூழலில் இருந்து வரும் கேள்வி, இதுக்கு லைஃபுலே பத்துபைசா பிரயோசனம் உண்டா என்பதுதான். பைசாப்பிரயோசனம் உள்ளது சமானியம். அதற்கு அப்பாற்பட்டது விசேஷம். அர்ஜுனன் தொடங்குவது சாமானியமான கேள்விகளைத்தான் கேட்டுக்கொண்டுதான் என தெரிகிறது. மேற்கொண்டுதான் அவனுக்கு பெரிய கேள்விகளெல்லாம் வருகின்றன. ஒவ்வொன்றாக அவனே கேட்டுக்கொண்டு முன்னால் செல்கிறான். அதற்கு கிருஷ்ணன் பதில் சொல்கிறான்

கீதையை வாசிப்பவர்கள் சாங்கிய யோகத்தில் கிருஷ்ணன் அதுகிடைக்கும் இதுகிடைக்கும் என்றெல்லாம் சொல்கிறாரே என்று சொல்வதுண்டு. அது சாமானியதளத்தில் உள்ள கேள்விக்கான சாமானிய பதில் என்பதுதான் எனக்கு கிடைத்தப்புரிதல்

மனோகர்