ஜெ
நான் கடந்த எட்டு
ஆண்டுகளாக கீதை வகுப்புகளுக்குச் சென்றுகொண்டிருக்கிறேன். இங்கே கீதை வகுப்புகள் ஒரு
பண்பாட்டுத்தொடர்ச்சிக்காக நடைபெறுகின்றன. தமிழ் இங்கே அதிகம் கிடையாது. ஆனால் உண்மையில்
சாங்கிய யோகத்தின் முதற்செய்யுளின் அர்த்தம் நீ சாமானிய தளத்திற்கான கேள்விகளுக்கு
விசேஷதளத்தில் பதில் தேடுகிறாய், இது தவறு என்பதுதான் என இப்போதுதான்புரிந்தது.
[துயர்ப் படத் தகாதார் பொருட்டுத் துயர்ப்படுகிறாய். ஞான உரைகளும் உரைக்கின்றாய்! ]
உனக்கு
பசித்தது என்றால் ஏன் தத்துவம்தேடி வருகிறாய் சோறுதேடு போ என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
சாங்கிய யோகத்தின் நோக்கமே இதுதான். லௌகீகமான கேள்விகளுக்கு லௌகீகத்திலேயே பதில்சொல்லி
முடித்துவிடுவது. இந்தப்பகுதி அதை தெளிவாக விளக்குகிறது.
லட்சுமணன்