ஜெ
இமைக்கணத்தில்
அடுத்ததாக பீஷ்மர் வந்தது இனிய ஆச்சரியம். அவருடைய கேள்விகளை வாசிக்கையில்தான் அவர்
தொடர்ந்து இந்தக் கேள்விகளை நோக்கி கதையில் வந்துகொண்டிருந்தார் என்பதை அறிந்தேன்.
கேள்விகள் கொண்டவர்கள் எல்லாம் வெண்முரசில் ஆழ்ந்த மௌனத்திற்குச் சென்றுவிட்டிருக்கிறார்கள்
என்று தோன்றியது. பீஷ்மர் கண்ணனிடம் கேட்கும் கேள்வி துறந்துசெல்வதைப் பற்றியது. கீதையின்
பெரும்பகுதி துறவைப்பற்றியது. ஆனால் இங்கே துறந்துசெல்லக்கூடாது, செயலாற்றவேண்டும்
என்று கிருஷ்ணன் சொல்கிறார். பீஷ்மருக்கு கர்மயோகம் சொல்லப்படுவது மிகவும் பொருத்தம்தான்
மகாதேவன்