விலங்கு நிலையிலிருந்து மானுடரை விடுதலை செய்தது என் முன்னோடிகளின் அறிவு. இருபாற்பிரிவு நோக்கிலிருந்து விடுதலை செய்வது என் அறிவு. நாளை எழும் அறிவோ இன்மையும் இருப்பும் ஒன்றென்று எழும் பேரறிவாகும் - கருத்துத்தளத்தில் நிகழும் பரிணாமம் பற்றி பல சிந்தனையாளர் சொல்லியிருக்கிறார்கள். நீட்ச்சே சொன்னார். பெர்க்ஸன் சொன்னார். அரவிந்தரும் சொல்லியிருக்கிறார். மனிதன் செல்வது எந்தவழியில் என்று
இந்தக்கருத்தை அரவிந்தர் வேறுசொற்களில் சொல்லியிருக்கிறார். உடல்மையமான ஜடகோசத்திலிருந்து மனிதர்கள் விடுபட்டதனால்தான் கலாச்சாரமே உருவானது. இன்றைக்கு உடல் X மனம் என்னும் இரண்டுநிலை உள்ளது. நாளைக்கும் உடல்மனம் என்ற ஒன்று உருவாகும். அன்கான்ஷியஸ் சப்கான்ஷியஸ் கான்ஷியச் எதுவும் இல்லாத சூப்பர்காண்சியஸ் எல்லாருக்கும் சேர்த்து உருவாகும் என்கிறார்
மகாதேவன்