ஜெ
இன்றைய அத்தியாயத்தில் அஸ்தினபுரியின் அறச்செல்வன் மிகச்சில உரையாடல்கள் வழியாக ஒளியோடு எழுந்து தெரிகிறான். யார் என்ரே தெரியாத பூரிசிரவஸுக்காக எந்த உதவியும் செய்யத் தயாராக இருக்கிறான்.
அதேபோல தன் தம்பியர் பற்றிய பெருமிதத்தை அவனிடம் காணமுடிகிறது. அதோடு அவர்கள்மீதுள்ள உரிமையும் சந்தேகமே இல்லாத நம்பிக்கையும் தெரிகிறது. பீமன் எந்த அரசனையும் தூக்கிக்கொண்டுவந்து உன் முன்னால் போடுவான் என்பதில் உள்ளது தந்தையருக்குச் சமானமான ஒரு மனநிலை.
அதை அவனே சொல்கிறான் . நகுலனையும் சகதேவனையும் பூரிசிரவஸ் ”அழகர்கள்” என்றான்.
ஆனால் தருமன் “ஆம், ஆனால் நான் அவர்களை பார்ப்பதில்லை. தந்தையர் விழிகளே மைந்தருக்கு முதல் கண்ணேறு என்பார்கள்.”என்று பதில் சொல்கிறான்
அதில் தன்னை அவர்களின் தந்தையாக்வே எண்ணிக்கொள்கிறான். தந்தையின் கண்பட்டுவிடும் என்கிறான்
சிவம்