கிருஷ்ணனின் இசையை கேட்டு கன்றுகள் அமர்ந்திருப்பதுபோல பெண்கள் இருப்பதை வாசித்தபோது
தோன்றிய ஒருவிஷயத்தைச் சொல்லவேண்டும். அதைப்போல ஆண்கள் உட்காரர்வார்களா? மாட்டார்கள்
என்றுதான் தோன்றுகிறது. கோபிகைகள் அவனுக்கு சுயசமர்ப்பணம் செய்தார்கள். அவனை அவர்களின்
மகனாகவும் காதலனாகவும் நினைத்து அவன் அருகெ சென்றார்கள். ஆண்களில் தாசபாவம் [சாத்யகி]
சுஹ்ருத் பாவம்[ அர்ஜுனன்] கொண்டவர்கள் மட்டுமே அவனை அணுகினார்கள். மற்றவர்களுக்கு
அது கைகூடவில்லை
அதேபோல அவன் சின்னப்பிள்ளையாக இருந்தபோது அவனுடன் இருந்தவர்கள் அவனை அணுகுவது
சாத்யமாகியது. ஏனெறால் அவர்களின் மனசும் அப்போது காமகுரோதம் இல்லாமல் இருந்தது. பெண்களுக்கும்
காமமும் குரோதமும் உண்டு. ஆனால் அம்மாவாக அதை அவர்களால் கடந்துபோக முடிகிறது
காந்தாரியின் மடியிலே காலை வைத்து உட்கார்ந்து கிருஷ்ணன் வாசிக்கும் காட்சி
ரொம்பநாளைக்கு மனசைவிட்டு மறையாது என்று நினைக்கிறேன்
ஜெயராமன்