அன்புள்ள ஜெ
பால்ஹிகரின் கவசங்களை வாசித்தபோது
அந்த முரண்பாட்டை எழுதத் தோன்றியது. பால்கிகர் ஆரம்பம் முதலே மல்லனாகத்தான் வருகிறார்.
மலைகளில் திறந்த உடலுடன் அலைகிறார். வெறுங்கையுடன் போரிடுகிறார். இதுவரை இல்லாத கவசம்
அவருக்கு எதற்கு? ஏன் அதில் அத்தனை ஆர்வம் அவருக்கு வருகிறது? அந்தக்கவசம் அவருக்கு
என்ன அர்த்தத்தை அளிக்கிறது? கவசங்களை அவர் குழந்தைத்தனமாகத்தான் விரும்புகிறார். ஆனால்
வாசகர்கள் வேறுகோணத்தில் அதை வாசிக்கலாமென நினைக்கிறேன். இதுவரை அவர் வாழ்ந்த உலகில்
மறைவுகள் இல்லை. இப்போது கவசத்திற்குள் மறைந்துகொள்ளவேண்டியிருக்கிறது
மனோகர்