Saturday, June 16, 2018

தந்தையர்





அன்புள்ள ஜெ

தன் மகள் மணம் முடித்துப்போவதைக் காணும்போது தந்தையருக்கு ஒரு இழப்பு உண்டு. அது ஒரு வகையான இருத்தலியல் துயர்தானே ஒழிய பொறாமையெல்லாம் இல்லை. இது இந்தியாவுக்கு வெளியே உண்டா தெரியவில்லை. இங்கே பெண் என்பவள் தந்தையின் ஒரு அரிய சொத்து. அவளை இழப்பது அவருக்குப் பிடித்தமானதாக இருப்பதில்லை. இந்தியாவில் பையன்பார்க்கும்போது வேண்டுமென்றே கொஞ்சம் தாழ்வாகப் பார்க்கும் தந்தையர் உண்டு. பெண் மிகவும் அழகும் புத்திசாலித்தனமும் உடையவள் என்றால் அந்தப்போக்கு மீண்டும் கூடுகிறது. மிகவும் நுட்பமாகக் கொண்டுசென்று குழியில் இறக்கிவிடுவார்கள் என்று சொல்கிறார்கள். அவர்களுக்கே அது தெரியாது. அந்தமாதிரி சிலபேச்சுக்கள் எங்கள் வட்டாரங்களில் வந்திருக்கின்றன

ராமச்சந்திரன்