Monday, June 25, 2018

பெருந்தந்தை




ஜெ

மூத்த பால்ஹிகரின் குணச்சித்திர உருவாக்கத்தை வாசித்தபோது எனக்கு கப்ரியேல் கார்ஸியா மார்க்யூஸின் நாவலில் வரும் யோஸ் ஆர்க்கேடியோ புவாண்டியோ கதாபாத்திரம் போல இருந்தது. அந்த முதுமை, மரணத்தை எதிர்பார்த்திருக்கிற சலிப்பு, முதுமையினால் வரும் மனப்பிறழ்வு, அதிலுள்ள மேஜிக்கல் அம்சம் எல்லாம் சேர்ந்து. ஆனால் இந்த பெருந்தந்தை என்ற கருத்து உலகளாவியது. வெண்முரசிலேயே பலவகைகளில் மீண்டும் மீண்டும் வந்துகொண்டே இருக்கிறது இது. பழைய சமூகங்களின் மனசில் சாகாத தந்தை என்ற இந்தக் கருத்து இருக்கும்போலும். ஆப்ரிக்கப்பழங்குடிக்கதைகளிலெயே சாகாத தந்தை உண்டு. ஆனால் இவர் சலிப்பூட்டாதவராக உர்சாகமானவராக இருக்கிறார். அவர் மரணம் பற்றிச் சொல்லுமிடங்கள் சுவாரசியமானவை.

ஜெயராமன்