ஜெ
மாயையை எப்படியாவது தன்
நாட்டின் எல்லையிலிருந்து அகற்றிவிடவேண்டும் என்று துரியோதனின் மனைவி பானுமதி நினைப்பது
மிக இயல்பாக இருந்தது. அது ஒரு பெரிய சாபத்தை கூடவே வைத்துக்கொண்டிருப்பதுபோலத்தான்.
அபூர்வமாக நம் குடும்பங்களில் அப்படி அமைந்துவிடும். வாழாமல்போன பெண்கள் கூடவே இருந்து
நம் மனதைக் கலக்கிக்கொண்டே இருப்பார்கள். அவர்களின் சாவுக்காக நாம் ஏங்குவோம். மூதேவி
என்றுதான் அவர்களைச் சொல்லமுடியும். அப்படிப்பட்ட ஒரு அத்தை எங்கள் குடும்பத்தில் இருந்தார்.
அவர் இறந்துவிடவேண்டும் என்று அப்பாகூட ஆசைப்பட்டார். பின்னர் அவர் கல்கத்தா சென்றபோது
பெரிய ஆறுதல். கல்கத்தா போனபின்னர் அவரும் நிறையவே மாறிவிட்டார். மாயை வெண்முரசிலே
மறக்கமுடியாத ஒரு கதாபாத்திரம்
எஸ்