Sunday, June 10, 2018

மாயையும் தேவியும்





ஜெ

முன்பு ஒருமுறை வெண்முரசுபற்றி போனில் பேசும்போது பெருந்தோழி பற்றிச் சொன்னீர்கள். பழையகாலத் தெய்வங்களுக்கெல்லாம் பெருந்தோழி என்ற கான்செர்ட் உண்டு என்றும் அதனால்தான் சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்கு தேவந்தி பெருந்தோழியாக வருகிறாள் என்றும்சொன்னீர்கள். மணிமேகலைக்கும் அதேபோல பெருந்தோழி உண்டு. அவள்பெயர்  சுதமதி.கேரள ஆலயங்களில் பகவதிகோயிலுக்கு வலப்பக்கமாக பெருந்தோழிக்குச் சின்னகோயில் இருக்கும் என்று சொன்னீர்கள். மாயை பாஞ்சாலியின் பெருந்தோழி. அதாவது அவளுடைய இன்னொரு வடிவம். அவள் மாயைவழியாகவும் செயல்படுகிறாள். மாயையும் திரௌபதிதான். சக்குளத்தம்மன் போன்ற சிலைகளில் மாயாதேவியைத்தான் அம்மன் தன் வாகனமாகக்கொண்டிருப்பதாகத்தெரியும். அதை நினைத்துக்கொண்டேன். மாயையின் மேலெ எறிவரும் அம்மன். இங்கே திரௌபதி துர்க்கையாகவே உருவகம் செய்யப்பட்டிருக்கிறாள். கேரள சாக்தமரபின்படி இதை அமைத்துள்ளீர்கள்

கணேஷ்.