Monday, June 18, 2018

புதிய அரசுகள்



ஜெ

ஆரம்பத்திலிருந்தே வெண்முரசு மகாபாரதப்போரின் ஒரு காரணமாகச் சொல்லிக்கொண்டிருப்பது அன்றைய சமூக- பொருளியல் சூழல்தான். புதிய அரசுகள் உருவாகி வந்து அதிகாரத்தில் பங்குகோரும்போது பழைய அரசுகள் அதை கடுமையாக எதிக்கின்றன. வெண்முரசில் இதுவரை ஓர் அரசு உருவாகி வந்து ஆற்றல்பெற்று எழுவதைப்பற்றிய எத்தனை சித்திரங்கள் வந்துள்ளன என்று எண்ணிப்பார்க்கையில் ஆச்சரியமாக இருக்கிறது. பூரிசிரவஸின் அரசு இப்போது உருவாகி வருகிறது. இளைய யாதவரின் யாதவ அரசும் இதேபோல உருவாகி வந்தது. நளனின் அரசும் இப்படித்தான் உருவாகி வந்தது. பாணாசுரன் பகன் போன்ற அசுரர்களின் அரசுகள் உருவாகி வந்த கதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் உருவாகி வருகின்றன. சில அரசுகள் அப்படியே அழிந்து மறைகின்றன. இந்த அரசு உருவாக்கம் நிகழ்ந்த காலகட்டம் என்பதும் இதிலுள்ள முரண்பாடுகள்தான் போர்களாயின என்பதும் வெண்முரசில் உருவாகி வரும் முக்கியமான வரலாற்று தரிசனம் என தோன்றுகிறது. ஓர் அரசு உருவானதுமே அது போரிட்டாகவேண்டும் என்ற நிலை உருவாகி வருகிறது. அது தன் சகோதரநாடுகலை ஜெயித்து ஓரு மையமாக ஆகியே ஆகவேண்டும். எதிரிகலையும் ஜெயித்துக்கொள்ளவேண்டும். அதுதான் போரின் அடித்தளம். மகாபாரதப்போரே இந்த அடிப்படையில்தான் நடந்துகொண்டிருக்கிறது

அர்விந்த்