அன்புள்ள
ஜெ
சாத்யகியின்
தாழ்வுணர்ச்சியைப் பற்றி ஒரு கடிதம் பார்த்தேன். நானும் அதையே நினைத்துக்கொண்டிருந்தேன்.
சாத்யகியின் மனநிலை இரண்டு உச்சங்களில் உள்ளது. அவன் இளைய யாதவரின் தொழும்பனாகத் தன்னை
அறிவித்துக்கொண்டவன். ஆகவே எளிமையும் அடக்கமும் அதேசமயம் தான் கிருஷ்ணனின் அடிமை என்ற
பெருமிதமும் கொண்டிருக்கிறான். இந்த இரண்டு மனநிலைகளில் இருப்பவனுக்கு ஏன் தாழ்வுணர்ச்சி?
எவருக்கானாலும் இன்னொரு இடத்தில் பணிந்து கைகட்டி கீழே அமைந்திருப்பவர்களிடம் அந்த
தாழ்வுணர்ச்சி இருந்துகொண்டே இருக்குமா என்ன? வெண்முரசில் வேறெந்த கதாபாத்திரத்திடமும்
இந்த தாழ்வுணர்ச்சி இருக்கவில்லை என்று ஞாபகம்
சாரதி