ஜெ
ஊர் மாறியிருக்கிறது.
சூழலும் கொஞ்சம் மாறியிருக்கிறது. ஆனால் இளவெயில் மாறவில்லை. பிரேமையும் மாறவில்லை.
அவளுக்கு அவன் இருபத்தைந்தாண்டுகள் விட்டுச்சென்றது ஒரு பொருட்டாகவே இல்லை. அவன் மனதில்
தான் இருக்கிறேனா என்ற சந்தேகமே இல்லை. எதையும் அவள் நிரூபிக்க முயலவில்லை. அவன் தன்னை
பொருட்படுத்தவில்லை என்று நினைக்கவில்லை. ஏனென்றால் அவளிடம் ஈகோவே இல்லை. அவனைக்கண்ட
அந்த மகிழ்ச்சியில் கொந்தளிக்கிறாள். அவள் அப்படித்தான் இருக்கமுடியும். அதுதான் அந்த
மலையின் இயல்பு. அவள் முழுக்கமுழுக்க நிகழ்காலத்தில் வாழ்பவள். முழுக்கமுழுக்க ஆணவம்
இல்லாதவள். அவள் முகத்தையும் கண்களையும்கூடப் பார்க்கமுடிகிறது
சிவராம்