ஜெ
மாயை
ரக்தாக என்று சொல்லிக்கொண்டிருந்தது மெய்சிலிர்ப்பை ஏற்படுத்தியது. அவள் வாழ்வது சப்கான்ஷியஸில்.
ஆகவேதான் அவள் கிறுக்குப்பிடித்திருக்கிறாள். அவள் ஒரு கேரக்டர் என்பதைவிட ஒரு சிம்பல்
என்றுதான் சொல்லவேண்டும்.அல்லது ஆர்க்கிட்டைப். எல்லா பண்பாடுகளிலும் இந்த ஆர்க்கிடைப்
உண்டு. மேலைநாட்டில் இதை சூனியக்காரிகள் என்கிறார்கள். அவர்கள் அங்கே ஆழத்தில் இருந்துகொண்டிருக்கிறார்கள்.
ஆறாத புண்னையே ஒரு மனித உருவமாக உருவகித்ததுதான் மாயை. இவர்கள் இங்கே என்னென்னவோ அரசியலும்
சமாதானமும் தத்துவமும் பேசிக்கொண்டிருக்க அங்கே அவர்களின் ஆழத்தில் அவள் ரத்தம் ரத்தம்
என்று ஜெபித்துக்கொண்டே இருந்திருக்கிறாள். அவள் இப்போது மேலே வந்துவிட்டாள். அவர்களுடைய
மனசுதான் இந்திரப்பிரஸ்தம். அதன் ஆழத்திலிருக்கிறாள் மாயை. அங்கிருந்து கொடுங்கனவுபோலக்
கிளம்பி வருகிறாள்
ராமச்சந்திரன்