அன்புள்ள ஜெ
மாயை பற்றி நிறைய கடிதங்கள்
இணையதளத்தில் வந்தன. ஆரம்பம் முதலே அந்தக்கதாபாத்திரம் எப்படி வளர்ந்து வந்திருக்கிறது
என்பதைக் கவனித்தேன். அது திரௌபதியின் இணையாக நிழல்போலத் தோன்றுகிறது. ஐந்து அன்னையரின்
ஆலயத்திலும் அவளுடன் மாயையும் தோற்றமளிக்கிறாள். திரௌபதியை பீமன் தன் தேரில் வைத்து
இழுக்கும்போது அந்தத்தேரில் அவளும் இருக்கிறாள். அர்ஜுனன் அவளைத்தான் முதலில் புணர்கிறான்.
ஆனால் சுயம்வரத்தில் மாயை திரௌபதியுடன் இல்லை. அவள் அழகில்லாதவள் ஆகையால் அவள் கூடவே
வரவேண்டியதில்லை என்று தவிர்த்துவிடுகிறர்கள். அதன்பின்பு அஸ்தினபுரிக்கும் இந்திரப்பிரஸ்தத்திற்கும்
கூடவே வருகிறாள். அவள்தான் பாஞ்சாலியின்பொருட்டு அஸ்தினபுரியின் வம்சத்தையே அழிப்பேன்
என்று சாபம் போடுகிறாள். அவள்தான் இப்போது திரௌபதியின் மறுவடிவமாக ஆகி வந்து நின்றிருக்கிறாள்.
திரௌபதியின் ஆல்டர் ஈகோ. அது எவ்வளவு ஆழத்தில் கொடூரமான வஞ்சத்துடன் இருக்கிறதுஎன்ற
எண்ணம்தான் மாயையை பார்க்கும்போது ஏற்பட்டது
சாரதி