ஜெ
மீண்டும் நீலம்
வாசிக்கிறேன். இந்தப்போர் நெருங்க நெருங்க எனக்கு நீலம்தான் மனசுக்கு உவப்பானதாக இருக்கிறது.
பூதனையின் கதை மிகவும் கொடூரமானதாக என் மனசில் முன்பு இருந்தது. ஆனால் அவளை பூ என பொருள்கொண்டு
பூமியுடன் சம்பந்தப்படுத்தியிருந்ததும் அவள் கண்ணனுக்கு கனிந்து முலையளிப்பதும் வேறு
ஒரு தளத்திற்குக் கதையைக்கொண்டுசென்றன. கதையின் அழகும் வீச்சும் வேறுமாதிரி ஆகிவிட்டது.
நீலத்தில் நிறையவே வன்முறை இருக்கிறது. உண்மையில் வெண்முரசின் அதே அமைப்புதான் அதற்கும் கடைசியில் ரத்தத்தால் மெழுகப்பட்டுள்ளது. ஆனாலும்
அதெல்லாம் குழந்தைக் கண்ணனின் லீலை என்று நினைப்பதனால் இயல்பாக வாசிக்க முடிகிறது
ராதிகா