ஜெ
பிரேமைக்கும் பூரிசிரவஸுக்குமான உறவைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். அவன் அவளை ஏன் விட்டுவிட்டு 25 ஆண்டு பிரிந்திருந்தான்? அதை அவனே கேட்டுக்கொள்கிறான். ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு பதிலை கண்டடைகிறான். நியாயப்படுத்திக்கொள்கிறான். நியாயப்படுத்தமுடியாது என்று எண்ணும் துக்கப்படவும் செய்கிறான். அவள் எதையுமே நினைப்பதில்லை. அவன் சென்றது பற்றியும் கேட்கவில்லை. வந்தது பற்றியும் கேட்கவில்லை. அவன் ஏன் சென்றான் என்பது வெண்முரசில் ஒரு மௌனமாகவே விடப்பட்டுள்ளது. அவனே சொல்லிக்கொள்ளும் காரணங்களுக்கு அப்பால் வாசகர்களும் ஏராளமாகவேகேட்டுக்கொள்ளலாம். ஆனால் இதெல்லாம் பழைய வாழ்க்கையில் சாதாரணமாக நடப்பதுதான். என் தாத்தா அப்படி கொழும்பில் ஒரு மனைவியை அப்படியே விட்டுவிட்டு வந்தார் என்று சொல்வார்கள். ஆனால் அவள்மேல் கடைசிவரை மிகவும் பாசத்துடன் அடிக்கடிச் சொல்லிக்கொண்டே இருந்தார். அப்பாவிடம் அவர்களைச் சென்றுபார்க்கவேண்டும் என்று சாவதற்கு முன்னால் கேட்டார். ஆனால் அவரும் போகவில்லை. அந்தக்காலத்தில் இதேபோல நடந்தது. என்ன என்று சொல்வது கஷ்டம். ஆனால் மனித உறவுகளைப்பற்றிச் சொல்வது எப்படியானாலும் கொஞ்சம் கஷ்டமானதுதான்
எஸ்.சுந்தர்