Saturday, June 9, 2018

மாயை 2





ஜெ

இப்போது அன்னியநாட்டில் இருக்கிறோம். வெண்முரசு ஒரு பெரிய இணைப்புப்பாலமாக இந்தியாவுடன் நம்மை இணைப்பு கொடுக்கிறது. வெண்முரசின் கதையை ஒவ்வொரு நாளும் என் குடும்பத்திற்குச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். அவர்களுக்கும் அது இந்தியாவின் ஒட்டுமொத்தக்கதையாகவே தோன்றியது. வெண்முரசுக்காக நன்றி சொல்லவேண்டும். 


வெண்முரசுக்கதை சொல்வது எப்போதுமே எங்கள் குடும்பகதைக்கும் அங்கிருந்து சொக்காரர்களின் கதைகளுக்கும் சென்றுவிடுகிறது. இப்போது மாயை இருக்கும் இதே நிலையிலேயே எங்கள் அத்தை ஒருத்தி பைத்தியமாக இருந்தாள் யாரைப்பார்த்தாலும் கொல்லணும் கொல்லணும் என்றுதான் சொல்வாள். அவளுடைய கணவர் குடும்பச்சண்டையில் கொல்லப்பட்டார். அவரும் பெரிய கிரிமினல்தான். ஆனால் இவர் அவருடன் டூவீலரில் போனபோது கொலை நடந்தது.இவரே அவரை வெட்டுவதைப்பார்த்துவிட்டார். 

மகாபாரதக்கதை எல்லா குடும்பங்களிலும் வேறுவேறு வடிவங்களில் நடக்குமென நினைக்கிறேன். அதிலும் குந்தியும் காந்தாரியும் இல்லாத வீடே இருக்காது. மகாபாரதத்தைவிட வெண்முரசில் அவர்களின் கதாபாத்திரங்கள் மிகமிகத் துல்லியமாகச் செதுக்கப்பட்டு நன்றாகத்தெரிந்தவர்களாக ஆக்கப்பட்டுள்ளன

எஸ்.ஆறுமுகம் நயினார்