Wednesday, June 13, 2018

மாயையின் மறைவு




அன்புள்ள ஜெ

வெண்முரசில் பல திடுக்கிடும் நிகழ்ச்சிகள் வந்துகொண்டே இருக்கின்றன. அவற்றுக்கு குறியீட்டுரீதியான அர்த்தங்களிருப்பதனால் அவை இந்தக் கதையோட்டத்தில் இயல்பாக ஒன்றாகிவிடுகின்றன. ஒரேசமயம் நுட்பமான யதார்த்தமாக ஓடிக்கொண்டிருக்கும் கதையில் இயல்பாக வந்துசேரும் பயங்கரமான நிகழ்ச்சிகள் ஒரு வகையான காவியச்சுவையை அளிக்கின்றன. இதைப்பற்றி முன்பு ராஜகோபாலன் அவருடைய கட்டுரையில் சுட்டிக்காட்டியிருந்தார். மாயை தீயில் எரிந்து மறையும் காட்சி அதிலொன்று. இப்போது பிரயாகையில் மாயை வரும் முதல் காட்சியை வாசிக்கையில் ஆரம்பத்திலேயே அவள் இந்த உச்சம்நோக்கித்தான் கொண்டுவரப்பட்டிருக்கிறாள் என்பது தெரிகிறது. பிரயாகையில் பாஞ்சாலியின் கூந்தலை ஐந்தாகப்பிரித்து அதில் குருதிபூசி முடியும்காட்சியில்தான் அவளை நாம் காண்கிறோம்


முருகேஷ்