அன்புள்ள ஐயா
பால்ஹிகரின் கதாபாத்திரம் ஆச்சரியப்படுத்துகிறது. அவர் காற்று போல இருக்கிறார். முன்பின் சொல்லாமல்தான் மலைக்குக் கிளம்பி வந்தார். கால்நூற்றாண்டு கழித்து முன்பின் சொல்லாமல் மலையிலிருந்து இறங்கிச் செல்கிறார். வாழ்வதற்காக மலைமேல் வந்தார். சாவதற்காக இறங்கிச்செல்கிறார் இரண்டுமே அவருக்கு ஒன்றுதான். அவருடைய அந்த பெரிய உடல் பீமனை நினைவூட்டுகிறது. குணமும் பீமனைப்போலவே காற்றுமாதிரி இருக்கிறது
அவர் அந்த மலையில் இருந்து இறங்குவது வரை மலையிலிருந்து மானசீகமாக இறங்கவில்லை. ஆனால் க்ஷீரவதியைக் கடந்ததும் அப்படியே துண்டித்துக்கொள்கிறார். அந்த மனநிலைதான் அவரை அத்தனைகாலம் உயிருடன் வாழச்செய்தது என்று சொல்லத்தோன்றுகிறது
மகாலிங்கம்