ஜெ
சாத்யகிக்கும் அவர் மகன்களுக்குமான உறவு மனம் கனக்கச் செய்கிறது.
பிரியம் நிறைந்திருப்பதனால்தான் அவன் கடுகடுப்பாக இருக்கிறார். ஆனால் மகன்கள் செய்யும்
எல்லாவற்றையும் ஒப்புக்கொள்கிறார். வேறு எவராவது தன் மகன்களை புண்படுத்தினால் கோபம்
கொள்கிறார். கொஞ்சம் தாழ்வுணர்ச்சிகொண்டவர்கள் தங்கள் பிள்ளைகள் உயர்ந்தவர்கள் வீட்டு
பிள்ளைகளிடம் பழகவேண்டும் என்ரு கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அதையும் அவரிடம் காணமுடிகிறது,
அவர்களில் மூத்தவ அசங்கனிடம் அவருக்கு மதிப்பும் இளையவனாகிய சினியிடம் பிரியமும் இருக்கிறது.
மூத்தவனைத் தொட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்ற அவருடையா ஆசையை நினைத்தபோது மனம் நெகிழ்ந்தது.
தேரில் அவர் தன் மகனின் காலை தெரியாதவர்போலத் தொடும் இடம் நெகிழ்ச்சியானது. ஏனென்றால்
என் அப்பா இப்படித்தான் தெரியாதவர்போல என்னைத் தொட்டுக்கொண்டே இருப்பார். அதை நான்
நெடுங்காலம் கடந்துதான் உணர்ந்துகொண்டேன். இதெல்லாமே என் அப்பாவின் குணங்கள் என்று தோன்றுகிறது
செல்வராஜ்