Tuesday, June 19, 2018

துரியன்




ஜெ

மாளவ அரசு என்றால் இன்றைக்குள்ள மகாராஷ்டிரம். அது விந்திய மலைகளுக்கும் தெற்குச்சரிவில் உள்ளது. பூனா சதாரா பகுதி. அந்தப்பகுதியை ஆள்பவர்களுக்கு வடக்கே பால்ஹிகநாடு [பலுசிஸ்தான்] எந்தவகையிலும் எதிரி கிடையாது. அவர்களை இவர்கள் சந்திப்பதற்கே வாய்ப்பு இல்லை. இருந்தாலும் சாலை அமைக்கும் தொழில்நுட்பத்தைத் தரமுடியாது என்று சொல்கிறார்கள். அதுதான் அன்றைக்கும் இன்றைக்கும் அரசியலில் நடக்கிறது

அதைமீறுபவன் துரியோதனன். தன் ஆட்சிக்குக்கீழே இருக்கும் ஒருநாடு வளர்ந்து எதிர்காலத்தில் பெரியநாடு ஆனால் அதனால் தனக்குத்தான் இழப்பு என்று தெரிந்தாலும்கூட அதைப்பொருட்படுத்தாமல் அந்த தொழில்நுட்பத்தை வரவழைத்து அளிக்கிறார். அவர்தான் பெருந்தன்மையின் உச்சம். மண்ணாசையும் ஆணவமும் ஒருபக்கம் இன்னொருபக்கம் பெருந்தன்மையும் அன்பும். துரியோதனன் மிகமிக விந்தையான கதாபாத்திரம்

ஜெய்ராம்