அன்புள்ள ஜெ
பூரிசிரவஸின் மகன் யாமாவுக்கும் அவனுக்குமான உறவே மிக இயல்பானதாகவும் அழகானதாகவும் உள்ளது. அவன் பூரிசிரவஸின் நிர்வாணத்தைப் பார்க்கும் இடம் மிக அழகிய ஒரு தருணம். அது அவனுடைய கள்ளமில்லாத தன்மையை மட்டும் காட்டவில்லை. ஒரு குறியீடுபோலவும் அது இருந்தது. என் அப்பா 82 வயதில் இறந்தபோது நான் ஆறுமாதம் அவரை பராமரித்தேன். அப்போது அவருடைய நிர்வாணத்தை நாள்தோறும் பார்ப்பேன். அப்போதுதான் நான் அவருட்ன் மிகவும் நெருங்கியதுபோலத் தோன்றியது. அவர் போன பிறகு அந்த உடல் நினைவுக்கு வரும்போது இன்னும் நெருக்கமாக உணர்ந்தேன். அவருக்கும் எனக்கும் ஒரு ரகசியமும் இல்லை என்று தோன்றும். அவருடைய உடம்புதான் என்னுடையதும் என்றும் தோன்றும். இன்று அந்த இடத்தை வாசித்தபோது நெகிழ்ச்சியாக உணர்ந்தேன்
ஆ. ரங்கராஜ்